பயிர் பாதுகாப்பு :: உருளைக்கிழங்கு பயிரைத் தாக்கும் நோய்கள்
முன் இலைக்கருகல் : அல்ட்டர்னேரியா சொலானி
தாக்குதலின் அறிகுறிகள்:
  • இது மலைகள் மற்றும் சமவெளி இரண்டிலும் உள்ளது.
  • இலைகளில் வெளிர் பழுப்பு நிறமுடைய புள்ளிகள் தோன்றும். பின்பு இப்புள்ளிகளில் வட்டவடிவமா வளையங்கள் தோன்றும்.
  • சில புள்ளிகள் இணைந்து இலை முழுவதும் பரவுகிறது.
  • பழங்களில் ஓட்டை விழும்.
 
  இலைகளில் கோண புள்ளிகள் பொதுமைய வளையங்கள் பாதிக்கப்பட்ட பயிர் பழங்களில் ஓட்டை
நோய் காரணி:

பரவல் மற்றும் வாழ்வதற்கான முறை:

  • பூசணம் மற்றும்மண்ணில் உள்ள பூசண இலைகள் அல்லது பாதிக்கப்பட்ட செடியின் குப்பைகள் 17 மாதங்களுக்கு மேல் இருக்கக் கூடும்.
  • பூசணம் அல்லது புதிய பூசண இலைகள் அடுத்தடுத்து வரும் புதிய உருளைக்கிழங்குகளின் பாதிப்பிற்கு காரணமாக அமைகிறது.
  • இரண்டாமி நிலை தொற்றுதல், நோய் பரவுவதற்கு முக்கியமான காரணம்.
  • முதன்மை தொற்று மூலம் உருவான புள்ளிகளில் வரும் பூஞ்சைகள் காற்று மூலம் நீண்ட தூரம் பரவுகிறது.
  • பாதிக்கப்பட்ட தாவரத்தில் இருக்கும் பூசண இழைகள் மழை மற்றும் பூச்சிகள் மூலம் அடுத்தடுத்து தாவரங்களுக்குப் பரவுகிறது.

நோய் தோன்றும் சூழ்நிலைகள்:

  • விட்டு விட்டு பெய்யும் மழைக்குப்பின் உலர்ந்த சூடான வானிலை.
  • மோசமான வீரியம் உள்ள வெப்பநிலை 25- 30°செல்சியஸ்
  • பயிர்களுக்குப் போதுமான உரம் இல்லாமை
கட்டுப்படுத்தும் முறை:
  • நோய் இல்லாத விதைக்கிழங்குகளை நடவுக்குப் பயன்படுத்த வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட தாவரத்திலிருந்து விழும் இலைகளை அகற்றதல் வேண்டும். ஏனெனில் பாதிக்கப்பட்ட இலைக்குப்பைகள் நோய் பரவுவதற்கு முதன்மைக் காரணமாக அமைகிறது.
  • சினேப் அல்லது காப்டான் 0.2%,மிகவும் ஆரம்ப நிலையில் தெளித்தல் மற்றும் 15- 20 நாட்கள் இடைவெளியில் மீண்டும் தெளிப்பதன் மூலம் பயனுள்ள கட்டுப்பாட்டை அடையலாம்.
  • நோய் எதிர்ப்புச்சக்தி கொண்ட குப்ரி சிந்தூரி என்ற ரகத்தைப் பயன்படுத்தலாம்.
Source of Images:
https://www.agric.wa.gov.au/sites/gateway/files/alternaria%20%2824%29.JPG
http://www.apsnet.org/edcenter/intropp/lessons/fungi/ascomycetes/PublishingImages/PotatoTomato01sm.jpg
http://www.forestryimages.org/browse/detail.cfm?imgnum=5362500
http://agropedia.iitk.ac.in/sites/default/files/Early%20blight%20_potato.jpg

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015